Connect with us
Raj News Tamil

Raj News Tamil

காதலியால் நடுரோட்டில் நிர்வாணமாக நின்ற காதலன்! உடம்பெல்லாம் காயம்!

இந்தியா

காதலியால் நடுரோட்டில் நிர்வாணமாக நின்ற காதலன்! உடம்பெல்லாம் காயம்!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள ஷஹாபூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி ஷிவ்பகத். கட்டுமான தொழில் செய்து வந்த இவர், பவிகா போயர் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இவர்களது காதல் தொடர்ந்த நிலையில், கடந்த ஜூன் 28-ஆம் தேதி அன்று, காதலியை சந்திப்பதற்கு பாலாஜி சென்றுள்ளார். சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென 5 மர்ம நபர்கள், அங்கு வந்துள்ளனர்.

பின்னர், அந்த 5 பேருடன் சேர்ந்து, தனது காதலனை பவிகா காரில் கடத்தி சென்றுள்ளார்.

இதையடுத்து, ஒரு நாள் முழுவதும் காதலனை அடித்து கொடுமைப்படுத்திய பவிகா, அவரிடம் இருந்த பணத்தையும், பிடுங்கிக் கொண்டுள்ளார்.

மேலும், அவரை நிர்வாணமாக்கிவிட்டு, நடுரோட்டில், காயங்களுடன் இறக்கவிட்டுள்ளனர்.

காயங்களுடன் தட்டுத்தடுமாறி, அங்கிருந்து நடந்து வந்த அவர், காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in இந்தியா

To Top