Connect with us

Raj News Tamil

18 ஆபாச தளங்கள் ப்ளாக்.. அதிரடி முடிவு எடுத்த மத்திய அரசு!

சினிமா

18 ஆபாச தளங்கள் ப்ளாக்.. அதிரடி முடிவு எடுத்த மத்திய அரசு!

ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டதால், 18 ஸ்ட்ரீமிங் தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகளை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.

பெண்களை தவறான முறையில் காட்சிப்படுத்துதல் தடை சட்டம், பிரிவு 4-ன் படியும், ஆபாசத்தை தூண்டும் வகையிலான பொருட்கள், வீடியோக்கள் விற்பனை தடை சட்டம், பிரிவு 292, ஆண்டு 1986-ன் படியும், தகவல் தொழில்நுட்ப சட்டம், பிரிவு 67 மற்றும் 67ஏ, ஆண்டு 2000-ன் படியும், மேற்கண்ட ஸ்ட்ரீமிங் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

பேஷரம்ஸ், ஹண்டர்ஸ், ட்ரீம் பிலிம், மூட் எக்ஸ், நியான் எக்ஸ், எக்ஸ்ட்ரா மூட் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தளங்கள் தான், ஆபாச படங்களை வெளியிட்டதற்காக, இந்த சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பது பின்வருமாறு:-

“ ஆபாசமான முறையிலும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், குறிப்பிடத்தக்க அளவிலான வீடியோக்கள், மேற்கண்ட தளங்களில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தளங்களில், நிர்வாணமாகவும், ஆபாசமாகவும், உறவுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் பல்வேறு வீடியோக்கள் உள்ளது.” என்று கூறியுள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட ஆப்கள் குறித்து, அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தடை செய்யப்பட்ட ஆப்களில் ஒன்று, 10 மில்லியன் பார்வையாளர்களால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது, வேறு இரண்டு ஆப்கள், 4 மில்லியன் பார்வையாளர்களால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது” என்று, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்து, “இவ்வாறு ப்ளாக் செய்யப்பட்ட 10 ஆப்களில், 7 ஆப்கள் ப்ளே ஸ்டோரிலும், 3 ஆப்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் இருந்துள்ளன. இதுமட்டுமின்றி, 12 பேஸ்புக் கணக்குகளும், 17 இன்ஸ்டாகிராம் கணக்குகளும், 16 எக்ஸ் தள கணக்குகளும், 12 Youtube கணக்குகளும் ப்ளாக் செய்யப்பட்டுள்ளன. ” என்று கூறப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top