Connect with us

Raj News Tamil

ஒரே நாளில் வெளியாகும் விமலின் இரண்டு திரைப்படங்கள்!

சினிமா

ஒரே நாளில் வெளியாகும் விமலின் இரண்டு திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் எதார்த்தமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விமல். ஆரம்பத்தில் எளிய மனிதர்களின் கதையை தேர்ந்தெடுத்து நடித்து, மனதிற்கு மிகவும் நெருக்கமான நடிகராக இருந்து வந்தார். ஆனால், அதன்பிறகு மசாலா பாணியிலான கதைகளில் நடித்து, மார்கெட்டை இழந்தார்.

தற்போது, மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ள இவர், பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் உருவான இரண்டு திரைப்படங்கள், ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, காமெடி நடிகர் சரவண சக்தி இயக்கத்தில், விஜய்சேதுபதி வசனத்தில், குலசாமி என்ற படத்தில் விமல் நடித்துள்ளார்.

இதேபோன்று, மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், தெய்வ மச்சான் என்ற படத்தில் விமல் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும், வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி அன்று திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top