2021-ம் ஆண்டில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளராக உள்ளார். இவர் தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ளார். இருப்பினும், டி.ஆர்.பி ராஜாவுக்கு ஒதுக்கப்படும் துறை குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். டி.ஆர்.பி.ராஜாவின் அப்பாவும் எம்.பியுமான டி.ஆர்.பாலு குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.