Connect with us

Raj News Tamil

நடிகர் சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

சினிமா

நடிகர் சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1977ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரத்பாபு.

இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த அண்ணாமலை மற்றும் முத்து திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

நடிகர் சரத்பாபு இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top