Connect with us

Raj News Tamil

மீண்டும் கிளம்பியது கமர்ஷியல் சிங்கம்.. இனி எத்தனை கோடி வசூல் ஆகப்போகுதோ?

சினிமா

மீண்டும் கிளம்பியது கமர்ஷியல் சிங்கம்.. இனி எத்தனை கோடி வசூல் ஆகப்போகுதோ?

ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு அன்று, தர்பார் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பெரும் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றியது. இதனால், அதள பாதாளத்திற்கு சென்ற முருகதாஸின் மார்கெட் மீண்டும் எழவே இல்லை.

இதற்கிடையே, விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்து, சிறு பிரச்சனையில் அந்த வாய்ப்பும் பறிபோனது. இவ்வாறு பல்வேறு தடங்கல்களை தாங்கிக் கொண்டு இருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படம், துப்பாக்கி பட பாணியில் உருவாக உள்ளது என்று கூறப்படுகிறது. பல்வேறு வலிகளை தாங்கிக் கொண்டிருந்த கமர்ஷியல் சிங்கம், தற்போது என்ன செய்யப்போகிறது என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். பார்க்கலாம்.. மீண்டும் ஒரு கத்தி, ரமணா, துப்பாக்கி வருமா என்று..!

More in சினிமா

To Top