Connect with us

Raj News Tamil

உலகத்தரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

சினிமா

உலகத்தரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

ரோஜா படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னர் பல்வேறு மொழிகளில் இசையமைத்த இவர், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் என பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மான், மெட்டாவெர்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ”கற்றார்” எனும் டிஜிட்டல் தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் மூலம் இசை கலைஞர்கள் உட்பட பல்வேறு துறை கலைஞர்களும், தங்களின் படைப்புகளை நேரடியாக பயனாளர்களுக்கு வழங்கலாம் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது படைப்புகளை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளதாகவும், மேலும் பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இதில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top