Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மெட்ரோ ரயில்.. பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த சேட்டை.. அதிர்ச்சி வீடியோ..

இந்தியா

மெட்ரோ ரயில்.. பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த சேட்டை.. அதிர்ச்சி வீடியோ..

மெட்ரோ ரயில்களில் பெரும்பாலான ஜோடிகள் ஆபாசமாக நடந்துக் கொள்வது, அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை வீடியோவாக எடுக்கும் நெட்டிசன்கள், இணையத்தில் வெளியிட்டு விடுகின்றன.

இந்த வீடியோக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் மெட்ரோ நிறுவனம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இருப்பினும், இதுமாதிரியான சம்பவம் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் வருகின்றன.

குறிப்பாக, டெல்லி மெட்ரோவில் தான், இதுமாதிரியான ஆபாசமான செயல்கள் அதிக அளவில் நடப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது, டெல்லி மெட்ரோ பாலத்தின் கீழ், பள்ளி சீருடை அணிந்த, மாணவனும், மாணவியும் சந்தித்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும், பொதுவெளியில் ஆபாசமாக நடந்துக் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் கசிந்து, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

More in இந்தியா

To Top