Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ரூ.5 இருந்தா போதும் சென்னை முழுக்க சுற்றலாம்..!

தமிழகம்

ரூ.5 இருந்தா போதும் சென்னை முழுக்க சுற்றலாம்..!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, டிசம்பர் 3-ந்தேதி மட்டும் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக (03.12.2023) அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத காரணத்தினால் மீண்டும் வருகின்ற 17.12.2023 அன்றும் மெட்ரோ பயணிகள் இச்சலுகையை பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ​

மேலும், டிசம்பர் 17, 2023 அன்று ஒரு நாள் மட்டும் வழங்கப்படும் இந்த சலுகை இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top