Connect with us

Raj News Tamil

16 ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் இணையும் காமெடி நடிகர்!

சினிமா

16 ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் இணையும் காமெடி நடிகர்!

லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா ஆகியோர் நடிக்கும் இந்த படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இன்னொரு நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

இவர், விஜயுடன் கடைசியாக அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top