Connect with us

Raj News Tamil

அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுதான்! கசிந்தது ரகசிய தகவல்!

சினிமா

அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுதான்! கசிந்தது ரகசிய தகவல்!

துணிவு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்கு, அஜித் முடிவு செய்திருந்தார். இதனால், விக்னேஷ் சிவனை நிராகரித்த அவர், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்திருந்தார்.

இந்த படத்தை, லைக்கா நிறுவனம், பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஆனால், படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதோடு, வேறு எந்தவொரு அறிவிப்பும், இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 2 வது வாரங்களில் தொடங்கப்படலாம் என்று தகவல் கசிந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதாவது, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய ஏதாவது ஒரு மாதத்தில், விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாம். இந்த தகவல், அஜித் ரசிகர்களுக்கு, கடும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top