Connect with us

Raj News Tamil

மீண்டும் அந்த இயக்குநருடன் கூட்டணி! ரசிகர்கள் புலம்பல்!

சினிமா

மீண்டும் அந்த இயக்குநருடன் கூட்டணி! ரசிகர்கள் புலம்பல்!

துணிவு படத்திற்கு பிறகு, ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்கு, அஜித் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். இதனால், விக்னேஷ் சிவனுக்கு டாட்டா காட்டிய அஜித், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்துள்ளார்.

விடாமுயற்சி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் அடுத்த படத்தை, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருப்பதாகவும், சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவலை அறிந்த அஜித்தின் ரசிகர்கள், புலம்பி வருகின்றனர்.

ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் அஜித், மீண்டும் எதற்காக, சிறுத்தை சிவாவுடன் கூட்டணி வைக்கிறார் என்றும், அவர் கிரிஞ்சான காட்சிகளை எடுக்கிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

அஜித்-சிறுத்தை சிவா இயக்கத்தில், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்கள் வெளியாகி உள்ளது. இந்த 4 படங்களில், 3 படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்பதும், விவேகம் என்ற ஒரேயொரு படம் மட்டும் தோல்வி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top