Connect with us

Raj News Tamil

மணிரத்னத்தை ஒதுக்கிய அஜித்..! – காரணம் இது தானா..?

சினிமா

மணிரத்னத்தை ஒதுக்கிய அஜித்..! – காரணம் இது தானா..?

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும், ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு இணைந்து நடிக்கமாட்டார்களா என்று அவரது ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய திரைப்படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1997ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்குநேர் படத்தில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் முதலில் அஜித் தான் ஒப்பந்தமாகியிருந்தாராம். 10 நாட்கள் படப்பிடிப்பில் கூட கலந்துகொண்டு நடித்தாராம். படப்பிடிப்பின் போது அஜித்திற்கும் இயக்குனர் வசந்த்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த இப்படத்தின் தயாரிப்பாளர்களான மணிரத்னம் மற்றும் சுஹாசினி தான், அஜித்தை இப்படத்திலிருந்து நீக்கியதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

ஒருவேளை, இதனால் தான் மணிரத்னத்தின் ஒரு படத்தில் கூட அஜித் நடிக்கவில்லையோ..?

More in சினிமா

To Top