Connect with us

Raj News Tamil

தளபதி என்ன தான் பண்ணாரு? – விஜயின் மீது இவ்வளவு வன்மமா?

சினிமா

தளபதி என்ன தான் பண்ணாரு? – விஜயின் மீது இவ்வளவு வன்மமா?

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் இசை வெளியீட்டு விழாவில் ” இந்த படம் உருவாக என்னோட அண்ணன், தளபதி விஜய் தான் காரணம்” என இயக்குனர் அட்லீ, விஜயை குறித்து மிகவும் பெருமையாகக் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சி, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிபரப்பானது. அதில், அட்லீ, விஜயை பற்றி பேசிய எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை. அதனை, கட் செய்து ஒளிபரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அந்த தொலைக்காட்சிக்கும் விஜய்க்கும் பிரச்சனை என்று பரவலாக பேசும் நிலையில், இந்த கட்டிங் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனால் விஜயின் ரசிகர்கள், விஜய் குறித்து அட்லீ பேசிய வீடீயோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

More in சினிமா

To Top