Connect with us

Raj News Tamil

“Dress கழட்டு.. போதை பொருள் இருக்கானு செக் பண்ணணும்” – அதிர்ச்சி அடைந்த பெண்.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

இந்தியா

“Dress கழட்டு.. போதை பொருள் இருக்கானு செக் பண்ணணும்” – அதிர்ச்சி அடைந்த பெண்.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

நாட்டை பாதுகாப்பதற்கு, புதுப்புது சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நாட்டில் உள்ள பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கு புதுப்புது திட்டங்களை கொள்ளைக்காரர்கள் தீட்டிக் கொண்டே தான் உள்ளனர்.

அவ்வாறு தீட்டப்படும் திட்டங்களால், பல பொதுமக்கள் தங்களது ஒட்டுமொத்த சேமிப்பையும் இழந்து, நிர்கதியான சம்பவங்களும், அவ்வப்போது அரங்கேறியுள்ளன. இவ்வாறு இருக்க, இளம்பெண் ஒருவரும், பலே மோசடி ஒன்றில் சிக்கி, தனது பணத்தை இழந்தது மட்டுமின்றி, ஆபாமாக வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளார்.

அதாவது, கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த பெண், வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த பெண்ணுக்கு, FedEx நிறுவனத்தின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், செல்போனில் பேசியுள்ளார்.

அவர், “உங்கள் பெயரில், தாய்லாந்து நாட்டிற்கு போதை வஸ்துகள் அனுப்பபட்டுள்ளது. இதனை காவல்துறையினர் பிடித்துள்ளனர்” என்று கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, “அவரது பெயர், ஆதார் எண்” ஆகியவற்றை சரியாக சொன்னவுடன், அந்த பெண் பயத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

இதையடுத்து, காவல்துறை அதிகாரி, சி.பி.ஐ அதிகாரி என்ற பெயரில், டிசைன் டிசைனாக பேசிய நபர்கள், அந்த பெண்ணிடம் உள்ள பணத்தை, தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், உங்களது வங்கி பரிவர்த்தணைகள் சரியாக உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என்றும், தங்கள் இஷ்டத்துக்கு புருடா விட்டுள்ளனர்.

இவ்வாறு, 15 லட்சம் ரூபாய் வரை, அந்த பெண்ணிடம் இருந்து, பெற்றுள்ளனர். இவை அனைத்திற்கு மேலாக, தனது ஆடைகளுக்கு இடையே ஏதாவது போதை வஸ்து நீங்கள் மறைத்து வைத்திருக்கலாம். அதனால், உங்கள் ஆடையை அவிழுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதற்கு முதலில் மறுத்த அந்த பெண், பின்னர் பயத்துடன் அதையும் செய்துள்ளனர். இவ்வாறு 36 மணி நேரம் தொடர்ச்சியாக அழைப்பில் இருந்த அவர்கள், அந்த பெண்ணை தொடர்ச்சியாக டார்ச்சல் செய்துள்ளனர்.

இறுதியில், அழைப்பை துண்டித்த அந்த பெண், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பிறகு, அந்த நபர்கள் மோசடி செய்பவர்கள் என்பது தெரியவந்தது. தற்போது, வழக்கு பதிவு செய்து, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FedEx மோசடி:-

FedEx மோசடியில், ஆயிரக்கணக்கான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். FedEx என்ற பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தின் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் மோசடிவாதிகள், பொதுமக்களின் உண்மையான தகவல்களை கூறி, முதலில் நம்பிக்கையை பெறுவார்கள்.

அதன்பிறகு, தங்களது வேலையை காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த மோசடி குறித்து, FedEx நிறுவனம் கூறும்போது, தங்களது பெயரில் எந்தவொரு அழைப்பு வந்து, உங்களது தனிப்பட்ட விவரங்களை கேட்டாலும், அவர்களுக்கு அதனை அனுப்பாதீர்கள்.

சந்தேகமான செல்போன் அழைப்பாக இருந்தால், உடனே காவல்துறையினருக்கும், சைபர் பிரிவுக்கு புகார் அளியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top