Connect with us

Raj News Tamil

பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு: தொழிலில் நஷ்டம்; அரசியல் வியாபாரத்தில் மட்டும் வெற்றி!

அரசியல்

பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு: தொழிலில் நஷ்டம்; அரசியல் வியாபாரத்தில் மட்டும் வெற்றி!

அரசியல் வியாபாரத்தைத் தவிர அனைத்து வணிகங்களிலும் நஷ்டம் ஏற்பட்டதால் அவை அனைத்தையும் மூட வேண்டியதாயிற்று என்று பாஜக எம்.பி. பாரத்சிங் தாபி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ஹேமசந்திராச்சார்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

‘பல அமைச்சர்கள், தலைவர்கள், தொழிலதிபர்கள் முன்னிலையில், 26 தொழில்களைத் தொடங்கினேன். ஆனால், அரசியல் வியாபாரத்தைத் தவிர அனைத்து வணிகங்களிலும் நஷ்டம் ஏற்பட்டதால் அவை அனைத்தையும் மூட வேண்டியதாயிற்று. அரசியல் வியாபாரம் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

20 தொழில்களையும் நான் முயற்சி செய்துவிட்டேன். அனைத்தும் முடிந்துவிட்டது. அரசியல் மட்டுமே நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. சர்பான்ச் கிராமத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது. எனக்கு இப்போது எந்த பிரச்னையும் இல்லை. நீங்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் உங்கள் நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் என்னுடையதைப் போல ஆகிவிடும்’ என்று பேசியுள்ளார்.

More in அரசியல்

To Top