Connect with us

Raj News Tamil

“6 பேரில் எந்த மனைவியை முதலில் கர்ப்பம் ஆக்க வேண்டும்” – குழம்பிய கணவருக்கு கிடைத்த விடை!

உலகம்

“6 பேரில் எந்த மனைவியை முதலில் கர்ப்பம் ஆக்க வேண்டும்” – குழம்பிய கணவருக்கு கிடைத்த விடை!

பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர். 37 வயதாகும் இவர், தற்போது 6 பெண்களை திருமணம் செய்துக் கொண்டு, ஒரே வீட்டில் வசித்து வருகிறார். உல்லாசமாக வாழ்க்கையை கழித்து வரும் ஆர்தருக்கு, தற்போது புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது.

தனது மனைவிகள் 6 பேரையும் சமமாக நடத்தும் ஆர்தர், அனைத்து விதத்திலும் அவர்கள் 6 பேருக்கும் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், தனது 6 பேரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து, அந்த சந்தோஷத்தை பெற வேண்டும் என்று நினைத்துள்ளார்.

இதற்கு என்ன தான் தீர்வு என்று தேடிய அவருக்கு, தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது, 6 பேரில் தனது முதல் மனைவியின் கருமுட்டைகளை எடுத்து, வாடகைத் தாய் முறையின் மூலம், ஒரே நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இதனால், 6 பேரும் ஒரே சந்தோஷம் அடைவார்கள் என்று நினைக்கிறாராம். இதற்காக, ரூபாய் 33 லட்சம் வரை செலவு செய்வதற்கு அவர் துணிந்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top