Connect with us

Raj News Tamil

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மின கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மின கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது.

இன்று (நவ.23) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோவை, தேனி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூக்குக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top