Connect with us

Raj News Tamil

ஜி20 மாநாட்டு விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

தமிழகம்

ஜி20 மாநாட்டு விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, டெல்லியில் வரும் 9-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

இந்த விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், திரவுபதி முர்முவின் பதவி இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி என்று இடம்பெற்றிருந்தது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, டெல்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. உலகின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவிருப்பதால், இந்த மாநாடு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டையொட்டி, உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு வரும் 9-ம் தேதி இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்கவுள்ளார்.

வரும் 9ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் அளிக்கும் இரவு விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், திரவுபதி முர்முவின் பதவி இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி என்று இடம்பெற்றிருந்தது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அப்போது முதல்வர் ஸ்டாலினும் இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார். முன்னதாக, ‘இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top