Connect with us

Raj News Tamil

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தெய்வமாக வழிபடும் சீன ரசிகர்!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தெய்வமாக வழிபடும் சீன ரசிகர்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை தெய்வமாக வழிபடும் சீன ரசிகர் ஒருவர்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா இறுதி போட்டியில் இலங்கை வென்று தங்கம் கைபற்றியது. இந்த சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தீவிர ரசிகரான சேர்ந்த வி ஜூன்யூ இறுதிப் போட்டியை பார்க்க மைதானத்துக்கு வந்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே இறுதிப் போட்டியில் 46 ரன்களை ஸ்மிருதி எடுத்தார்.

அப்போது மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த வி ஜூன்யூ, ‘மந்தனா தெய்வம்’ என ஆங்கிலத்தில் குறிப்பிடும் வகையில் பதாகை ஒன்றை கையில் ஏந்தி நின்றார். அது பரவலான கவனத்தை பெற்றுள்ளது. “நான், ஸ்மிருதியின் ஆட்டத்துக்கு தீவிர ரசிகன். அவர் நல்ல ரிதத்தில் பேட் செய்வதை பார்க்க அற்புதமாக இருக்கும். அவர் எங்கள் நாட்டில் பேட் செய்வதை நேரடியாக பார்க்கும் வகையில் இங்கு வந்துள்ளேன். மந்தனா ஆடுவதை பார்க்க எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். அவரது ஆட்டத்தை நெடு நாட்களாக தவறாமல் பார்த்து வருகிறேன்” என 25 வயதான வி ஜூன்யூ தெரிவித்தார்.

More in விளையாட்டு

To Top