Connect with us

Raj News Tamil

காங்கிரஸ் 70 ஆண்டு காலம் ஆட்சியில் ஏழைகாக எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை: அமித் ஷா!

இந்தியா

காங்கிரஸ் 70 ஆண்டு காலம் ஆட்சியில் ஏழைகாக எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை: அமித் ஷா!

இந்தூரில் மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜகவின் தோ்தல் பிரசாரத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா நேற்று தொடங்கிவைத்தார்.

அவா் பேசியதாவது:

நாட்டை 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, ஏழைகளின் நலனுக்காக எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், ஏழை மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருவதன் மூலம் ஏழைகளின் காப்பாளராக பிரதமா் மோடி அறியப்படுகிறார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ தனது குழந்தை போல் வளா்த்தெடுத்தது காங்கிரஸ்.

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து, குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனா். ஆனால், பிரதமா் மோடி தலைமையின்கீழ் துல்லியத் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது.

130 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கியதன் மூலம் அந்த பெருந்தொற்றில் இருந்து இந்தியாவை காத்துள்ளார் பிரதமா் மோடி.

மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி. அதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றியை தொண்டா்கள் உறுதி செய்ய வேண்டும்.

2014 மக்களவைத் தோ்தலில் மத்திய பிரதேசத்தில் 27 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. 2019-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 28-ஆக அதிகரித்தது. 2024-ஆம் ஆண்டில் அனைத்து தொகுதிகளையும் பிரதமா் மோடிக்கு மாநில மக்கள் வழங்குவா் என்ற நம்பிக்கை உள்ளது.

நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் பாஜக அமைப்புரீதியில் சிறப்பாக செயல்படுகிறது என்றார் அமித் ஷா.

More in இந்தியா

To Top