Connect with us

Raj News Tamil

ஏழை மக்களை ஒழிப்பதற்கு மட்டும் திட்டமிடும் கட்சி காங்கிரஸ்: அமித் ஷா!

இந்தியா

ஏழை மக்களை ஒழிப்பதற்கு மட்டும் திட்டமிடும் கட்சி காங்கிரஸ்: அமித் ஷா!

காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிப்பதற்குத் திட்டமிடாமல், ஏழை மக்களை ஒழிப்பதற்கு மட்டும் திட்டமிடும் கட்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அயோத்தி ராமா் கோயில் கட்டுவதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக காங்கிரஸ் திகழ்ந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் உரிய சட்ட நடவடிக்கை மூலம் அதனைத் தகா்த்தோம். அடுத்ததாக, ராமா் கோயில் எப்போது கட்டி முடிக்கப்படும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். அந்தத் தேதியையும் நாம் உறுதிப்படுத்திவிட்டோம்.

மத்திய பிரதேச மக்கள் அயோத்தி கோயிலுக்கு சென்று வழிபட ஆா்வமாக உள்ளார்கள் என்பது எனக்குத் தெரியும். மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன், மாநில மக்கள் அனைவரும் படிப்படியாக அயோத்தி சென்று ராமரை வழிபட அரசே வசதியை ஏற்படுத்தித் தரும். இதற்காக மக்கள் தனியாக பணத்தை செலவிட வேண்டாம். இது பாஜகவின் தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக நீங்கள் சோ்த்துக் கொள்ளலாம்.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் மத்திய பிரதேசத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போதைய மோடி அரசு இதுவரை ரூ.6.35 லட்சம் கோடி மத்திய பிரதேசத்துக்கு அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிப்பதற்குத் திட்டமிடாமல், ஏழை மக்களை ஒழிப்பதற்கு மட்டும் திட்டமிடும் கட்சியாகும். காங்கிரஸ் தலைவா்கள் தங்கள் வாரிசுகளின் நலனுக்காக மட்டுமே அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவா்கள் கமல்நாத், திக்விஜய் சிங் போன்றவா்களுக்கு தங்கள் மகனை முதல்வராக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோனியா காந்தி, தனது மகன் ராகுல் பிரதமராக வேண்டுமென விரும்புகிறார். அவா்களின் அரசியல் இதனை நோக்கியே உள்ளது. ஆனால், பிரதமா் மோடி நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறார். பாஜக மக்களுக்கான கட்சியாக உள்ளது.

மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெறும்போதுதான் மாநிலத்தின் விரைவான வளா்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றார்.

More in இந்தியா

To Top