Connect with us

Raj News Tamil

கான்ஜூரிங் கண்ணப்பன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

கான்ஜூரிங் கண்ணப்பன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் சதீஷ். நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய இவர், தற்போது, கான்ஜூரிங் கண்ணப்பன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை, செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால், படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், இதுதொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படம், வரும் டிசம்பர் 8-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top