Connect with us

Raj News Tamil

பாஜகவுடன் கூட்டணி கிடையாது…..நாடாளுமன்ற தேர்தலில் மஜத தனித்து போட்டி

அரசியல்

பாஜகவுடன் கூட்டணி கிடையாது…..நாடாளுமன்ற தேர்தலில் மஜத தனித்து போட்டி

கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவுடன் இணைந்து செயல்பட போவதாக தேவகவுடாவின் மகனும் மஜத தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும் என தேவகவுடா அறிவித்துள்ளார்.

எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in அரசியல்

To Top