Connect with us

Raj News Tamil

கொல வெறி இயக்குநருடன் 2-வது முறை இணையும் தனுஷ்!

சினிமா

கொல வெறி இயக்குநருடன் 2-வது முறை இணையும் தனுஷ்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.

இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சேகர் கம்முலா, மாரி செல்வராஜ் ஆகியோரின் திரைப்படங்களை வரிசையாக முடித்த பிறகு, மீண்டும் அருண் மாதேஸ்வரன் படத்தில் நடிக்க உள்ளாராம்.

இவர் திரைப்படங்களில் வெறித்தனமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top