Connect with us

Raj News Tamil

தனுஷின் அடுத்த 5 படங்கள் என்னென்ன? செம Lineup!

சினிமா

தனுஷின் அடுத்த 5 படங்கள் என்னென்ன? செம Lineup!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு, நெல்சன் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதனையடுத்து, தனது 50-வது படத்தை, இயக்கி நடிக்க உள்ளார்.

இந்த 3 படங்களுக்கும், ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதுமட்டுமின்றி, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்திலும், இந்தி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்திலும் உருவாக உள்ள படங்களில், அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.

இவ்வாறு, பிரபலமான இயக்குநர்களின் படங்களில் தனுஷ் நடிக்க இருப்பதால், அவரது மார்கெட் நிச்சயம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top