Connect with us

Raj News Tamil

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி! பிரபல நடிகருடன் மோதும் விக்ரம்!

சினிமா

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி! பிரபல நடிகருடன் மோதும் விக்ரம்!

விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வந்த இந்த திரைப்படம், முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில், கைவிடப்பட்டது.

ஆனால், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பாலும், வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியாலும், இந்த படத்தின் சொற்ப காட்சிகள், மீண்டும் படமாக்கப்பட்டது.

தற்போது, அந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், பின்னணி தொழில்நுட்ப பணிகளை, கௌதம் மேனன் கவனித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த திரைப்படத்தை ஜூலை 14-ஆம் தேதி அன்று வெளியிட, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த படத்தை மே மாத இறுதியில் வெளியிடலாம் என்று தான் படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், தொழில்நுட்ப பணிகள் தாமதம் ஆனதால், ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படமும், ஜூலை 14-ஆம் தேதி அன்று தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top