Connect with us

Raj News Tamil

ரூ.2,416 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் அழிப்பு!

அரசியல்

ரூ.2,416 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் அழிப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் புதுடெல்லியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ரூ. 2,416 கோடி மதிப்புள்ள சுமார் 1.44 லட்சம் கிலோ போதைப்பொருள்களை காணொலியில் இருந்த அமித் ஷா முன்னிலையில் அந்தந்த மாநிலங்களில் அழிக்கப்பட்டன.

இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேச பகுதியில் இருந்து 1,03,884 கிலோ, ஹைதராபாத் பகுதியில் இருந்து 6,590 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

More in அரசியல்

To Top