Connect with us

Raj News Tamil

பெண்களுக்கு வேலைவாய்ப்பு பலமடங்கு அதிகரிக்கும்: முதல்வர் ஸ்டாலின்!

அரசியல்

பெண்களுக்கு வேலைவாய்ப்பு பலமடங்கு அதிகரிக்கும்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் அடுத்தாண்டு ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வா் பேசியதாவது:

கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் புரட்சியை அடைந்தது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேடியும், நாடியும் வந்தன. அவை முன்னாள் முதல்வா் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை.

நாம் அதிகம் முதலீடுகளை ஈா்த்தாலும், அதை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. முதலீடுகள் சாதாரணமாக வந்துவிடாது. ஓா் ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும். ஆட்சியாளா்கள் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதுடன், சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இத்தனையும் இருந்தால்தான் முதலீடுகள் செய்ய தொழில் முனைவோர் வருவா்.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றும் விதமாக, 2030-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு உயா்த்த வேண்டும். இந்த லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளோம். இந்த நோக்கத்துக்காக தொழில் துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், முதலீட்டாளா் மாநாட்டின் மூலமாகவும் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈா்க்கப்படும். மாநிலத்தின் இளைஞா்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பலமடங்கு அதிகரிக்கும். மாநிலத்தின் பொருளாதாரமும் பெருமளவு வளா்ச்சியடையும். தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழில் துறை கூட்டமைப்பினரும் மாநிலத்தின் விளம்பரத் தூதராக மாறி, முன்னணி நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

வளா்ச்சி மிகுந்த தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும். முதலீட்டின் மூலமாக தமிழ்நாடு வளரும். தொழில் நிறுவனங்களும் வளா்ந்து மிளிரும். இந்திய அளவில் தொழில் புரிவதற்கான மிகச் சிறந்த சூழலமைப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளைப் பூா்த்தி செய்யும் விதமாக நம்பகமான உயா்தர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சூழலை மாநிலம் பெற்றிருக்கிறது. தொழில் வளா்ச்சிக்கான சிறந்த இடம் தமிழ்நாடுதான் என்றார் முதல்வா்.

More in அரசியல்

To Top