Connect with us

Raj News Tamil

இவிஎம் 100 சதவீதம் பாதுகாப்பானவை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

இந்தியா

இவிஎம் 100 சதவீதம் பாதுகாப்பானவை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

இவிஎம்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை. இவிஎம்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை. அவை குறித்து உச்ச நீதிமன்றமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நாங்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் போலி வாக்குகள் பதிவாகின்றன என்று கூறுகின்றனர்.

தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் என பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் இதில் உள்ளன. எனவே வாக்களார்கள் வாக்களிப்பதில் மட்டும் களிப்புறட்டும். இது வாக்களித்து மகிழ்ந்திருக்கும் தருணம். எதையும் சந்தேகிக்கும் நேரம் இல்லை. வாக்காளர்களின் வாக்குகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும். மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வர வேண்டும்” என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top