Connect with us

Raj News Tamil

குடும்ப தகராறு: மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சென்ற கொடூர சம்பவம்!

இந்தியா

குடும்ப தகராறு: மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சென்ற கொடூர சம்பவம்!

ராஜஸ்தானில் பெண் ஒருவர் அவரது குடும்பத்தினரால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ வெளியோகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பிரதாப்கார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. எனினும், அந்த பெண்ணுக்கு, அண்டை வீட்டில் வசிக்கும் வேறொரு நபருடன் தொடர்பு உள்ளது என கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், மனைவியை கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில் கொடூர நிகழ்வாக, அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் கிராமத்தில் ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை ஒருவர் விடியோ எடுத்த நிலையில் அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள காவல்துறையினர் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட், நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. இந்த குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு, விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

More in இந்தியா

To Top