Connect with us

Raj News Tamil

“லால் சலாம் தோல்வி.. இவர் தான் காரணம்” – பழிபோடும் ரஜினியின் மகள்?

சினிமா

“லால் சலாம் தோல்வி.. இவர் தான் காரணம்” – பழிபோடும் ரஜினியின் மகள்?

3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா. இவர் தற்போது, விஷ்னு விஷால், விக்ராந்த் ஆகியோரை வைத்து, லால் சலாம் என்ற படத்தை இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இப்படம், பலத்த தோல்வியை சந்தித்தது. இதற்கு, திரைக்கதை சரியாக அமைக்கப்படாததே காரணம் என்று விமர்சகர்கள் கூறி வந்தனர்.

ஆனால், அதற்கு வேறொரு காரணம் உள்ளது என்று ஐஸ்வர்யா கூறியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, லைக்கா நிறுவனத்தின் தமிழ்குமரன், லால் சலாம் படத்தை சரியாக விளம்பரப்படுத்தவில்லையாம்.

அதனால் தான், இப்படம் தோல்வியை சந்தித்தது என்று, ஐஸ்வர்யா பேசியதாக, கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

More in சினிமா

To Top