Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகம்

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top