Connect with us

Raj News Tamil

யாருக்கும் தெரியலையே.. மோட்டார் வாகன சட்டத்தில் வந்த புதிய விதி.. CSR Copy வேணும்னா இத பண்ணனும்..

தமிழகம்

யாருக்கும் தெரியலையே.. மோட்டார் வாகன சட்டத்தில் வந்த புதிய விதி.. CSR Copy வேணும்னா இத பண்ணனும்..

பொதுவாக அரசு புதிதாக கொண்டு வரும் சட்டங்கள், பொதுமக்களை சென்றடைய வேண்டியது மிகமிக அவசியம். ஆனால், சில சட்டங்கள் மக்களை சென்றடையாமலே, நேரடியாக அமலுக்கு வந்துவிடுகின்றன.

இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு சார்பிலும், ஊடகங்கள் சார்பிலும், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மோட்டார் வாகன சட்டத்தில், புதிய விதிமுறை ஒன்றை, அரசு கொண்டு வந்துள்ளது.

ஆனால், இந்த சட்டம் நடைமுறையில் வந்திருப்பது பலருக்கும் தெரியாமல் உள்ளன. அதாவது, ஒரு வாகனம் இன்னொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினால், காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்படும்.

அவ்வாறு வழக்கு பதிவு செய்த பின், காவல்துறையினர் சார்பில் CSR ( Community Service Register ) Copy வழங்கப்படும். இந்த ஆவணத்தை பயன்படுத்தி தான், விபத்துக்கான காப்பீடு பணத்தை பெற முடியும்.

ஆனால், தற்போது வந்துள்ள புதிய விதிகளின் படி, வாகனத்தின் மீது ஏதோனும் அபராதங்கள் நிலுவையில் இருந்தால், அதனை கட்டிய பிறகே, CSR Copy வழங்கப்படுமாம்.

இன்னும் விளக்கமாக சொன்னால், ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்களை வாகன ஓட்டிகள் செய்யும்போது, தானியங்கி கேமராக்கள் மூலமாகவோ, காவல்துறையினர் மூலமாகவே, அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபாராத தொகையை செலுத்தாமலே, பலர் வாகனங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக, இந்த புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.

More in தமிழகம்

To Top