Connect with us

Raj News Tamil

மீண்டும் சினிமாவில் நடிப்பாரா உதயநிதி ???

சினிமா

மீண்டும் சினிமாவில் நடிப்பாரா உதயநிதி ???

தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தின் 50-ஆவது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,” மாமன்னன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும்போதே படம் வெற்றி பெரும் என்று நம்பிக்கை இருந்தது. வடிவேல் சிறப்பாக நடித்திருந்தார். அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்திருந்தால் இந்த படம் எடுப்பதை கைவிட்டிருப்போம்” என்று கூறினார்.

மேலும் இதுவே தான் நடித்திருக்கும் கடைசி படம் என்றும், மீண்டும் திரைப்படத்தில் நடிக்க போவதில்லை, இது ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்றும் கூறினார். தான் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றி பெற்றது, அதுபோல் கடைசியாக நடித்த மாமன்னனும் வெற்றியை தந்திருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

More in சினிமா

To Top