Connect with us

Raj News Tamil

இந்திய டி20 அணி: மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

விளையாட்டு

இந்திய டி20 அணி: மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மூத்த வீரா்கள் அணியில் இல்லை. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3 முதல் 13-ம் தேதி வரையில் இந்த 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய இளம் வீரா்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வா்மா ஆகியோருக்கு இதில் இடம் கிடைத்துள்ளது. இந்திய டி20 அணியில் முதல் முறையாக அவா்கள் இணைந்துள்ளனா்.

இந்த அணியின் கேப்டனாக ஹா்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூா்யகுமார் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனா். ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரா்கள் அணியில் இல்லை.

அணி விவரம்: ஹா்திக் பாண்டியா, சூா்யகுமார் யாதவ், இஷான் கிஷண், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வா்மா, சஞ்சு சாம்சன், அக்ஸா் படேல், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அா்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

More in விளையாட்டு

To Top