Connect with us
Raj News Tamil

Raj News Tamil

இறைவன் எப்படி உள்ளது? – ரசிகர்கள் சொல்வது என்ன?

சினிமா

இறைவன் எப்படி உள்ளது? – ரசிகர்கள் சொல்வது என்ன?

ஐ அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் இறைவன். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். அந்த விமர்சனங்களின் படி, இந்த திரைப்படம் மிகவும் சுமாராக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

மேலும், படத்தின் முதல் பாதி சுமாராகவும், இரண்டாவது பாதி மிகவும் சுமாராகவும் உள்ளது என்று, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெயம் ரவியின் நடிப்பும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தான், படத்தில் உள்ள ஒரே ஆறுதலான விஷயம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனால், இப்படம் ஜெயம் ரவிக்கு, தோல்வி படமாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளது.

More in சினிமா

To Top