Connect with us

Raj News Tamil

காவாலா பாடல் இந்த பாடலின் காப்பியா? இது எம்.ஜி.ஆர்-க்கு தெரிஞ்சா என்ன ஆகும்?

சினிமா

காவாலா பாடல் இந்த பாடலின் காப்பியா? இது எம்.ஜி.ஆர்-க்கு தெரிஞ்சா என்ன ஆகும்?

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த பாடல், பழைய பாடல் ஒன்றின் காப்பி என்று, இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, பழைய படம் ஒன்றில், எம்.ஜி.ஆர் கதாநாயகியை பார்ப்பது போல், காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அப்போது, பின்னணி இசை ஒன்று ஒலிக்கப்பட்டுள்ளது. இதனை லேசாக பட்டி டிங்கரிங் செய்த அனிருத், காவாலா பாடலை தயார் செய்திருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, பல்வேறு மீம்ஸ்களும், இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top