Connect with us

Raj News Tamil

காஜல் அகர்வாலிடம் ஆபாசமாக நடந்துக் கொண்ட ரசிகர்!

சினிமா

காஜல் அகர்வாலிடம் ஆபாசமாக நடந்துக் கொண்ட ரசிகர்!

பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இந்த படத்திற்கு பிறகு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

ஆனால், அதன்பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த காஜல் அகர்வால், பிரபல தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு, குடும்ப வாழ்க்கையில் இறங்கினார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக, நேற்று அவர் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ரசிகர் ஒருவர், காஜல் அகர்வாலிடம், அத்துமீறி நடந்துக் கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகள் பொது இடங்களுக்கு வரும்போது, இதுமாதிரியான சம்பவங்கள் நடப்பதற்கு, பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை, ஏழை பெண்கள் முதல் வசதியும், பிரபலமும் உள்ள பெண்கள் வரை, அனைவரும் இதுபோன்ற நபர்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top