Connect with us

Raj News Tamil

கார்த்தியின் 27-வது படம் இதுதான்! ப்ளாக் பஸ்டர் ஹிட் இயக்குநருடன் கூட்டணி?

சினிமா

கார்த்தியின் 27-வது படம் இதுதான்! ப்ளாக் பஸ்டர் ஹிட் இயக்குநருடன் கூட்டணி?

சிறப்பான கதைக் களங்களை தேர்வு செய்து திரைப்படங்களில் நடிப்பதில் வல்லவர் கார்த்தி.

சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

இதன்காரணமாக, இவரது அடுத்த திரைப்படத்தை எதிர்நோக்கி, பலரும் காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்தியின் 27-வது படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இவரது 25 திரைப்படமாக, ஜப்பான் உருவாகி வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு, நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கு பிறகு, 96 என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் பிரேம்குமார் உடன் இணைய உள்ளாாராம். இருவரும் ஒன்றாக இணைய இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More in சினிமா

To Top