Connect with us
Raj News Tamil

Raj News Tamil

லியோ படத்தின் Audio Launch அப்டேட்! கொஞ்சம் நல்ல செய்தி.. கொஞ்சம் கெட்ட செய்தி..

சினிமா

லியோ படத்தின் Audio Launch அப்டேட்! கொஞ்சம் நல்ல செய்தி.. கொஞ்சம் கெட்ட செய்தி..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான இரண்டு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதில், முதல் அப்டேட் என்னவென்றால், விஜயின் அறிமுக பாடலை எடுக்கும் பணியில், லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறாராம்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை கொண்டு, மிகவும் பிரம்மாண்டமான முறையில், இந்த பாடல் உருவாகி வருகிறதாம். இதனை வைத்து பார்க்கும்போது, வாத்தி கம்மிங் போல், இன்னொரு தரமான பாடல் உருவாகி வருவது உறுதியாகியுள்ளது.

இரண்டாவது அப்டேட் என்னவென்றால், லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச், வெளிநாடுகளில் நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள், இந்த நிகழ்ச்சியை நேரில் சென்று காண்பது, கொஞ்சம் அரிதான விஷயமாக ஆகியுள்ளது. இவ்வாறு, விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு அதிர்ச்சி செய்தியும் வெளியாகி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top