Connect with us

Raj News Tamil

அடுத்த பெரிய கட்டத்திற்கு நகர்ந்த லவ் டுடே திரைப்படம்!

சினிமா

அடுத்த பெரிய கட்டத்திற்கு நகர்ந்த லவ் டுடே திரைப்படம்!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அடுத்ததாக இயக்கி நடித்திருந்த திரைப்படம் லவ் டுடே. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

100 நாட்கள் வரை ஓடிய இந்த திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்த்து, 100 கோடி ரூபாய் வரை வசூலித்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு இருக்க, இந்த படம் தற்போது இன்னொரு பெரிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

அதாவது, இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். இந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ள பிரதீப் ரங்கநாதன், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top