Connect with us

Raj News Tamil

டெக்னீஷியன்ஸ்-க்காக அஜித் வைத்த கோரிக்கை!

சினிமா

டெக்னீஷியன்ஸ்-க்காக அஜித் வைத்த கோரிக்கை!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில், தற்போது உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், அஜித் தனது திரைப்படத்தில் பணியாற்றி வரும் டெக்னீஷியன்களுக்காக, லைக்காவிடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாராம்.

அதாவது, விடாமுயற்சி படத்தில் கலை இயக்குநராக பணியாற்றி வந்த மிலன், சமீபத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல், அஜித் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக, படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் உடல்நிலை சரியாக தான் உள்ளதா என்று தெரிந்துக் கொள்ள, மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு லைக்காவிடம் அஜித் கோரிக்கை வைத்துள்ளாராம்.

இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், அஜித்தின் மனித நேயத்தை பாராட்டி வருகின்றனர்.

More in சினிமா

To Top