Connect with us

Raj News Tamil

100-க்கு 138 மதிப்பெண் வாங்கிய மாணவி.. இருந்தும் தேர்வில் தோல்வி.. என்ன நடக்குதுப்பா?

தமிழகம்

100-க்கு 138 மதிப்பெண் வாங்கிய மாணவி.. இருந்தும் தேர்வில் தோல்வி.. என்ன நடக்குதுப்பா?

2022-23 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியானது. இதில், கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தார்.

இதேபோன்று, பல்வேறு மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று, தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, கல்லூரிகளில் சேர முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், 100-க்கு 138 மதிப்பெண்கள் பெற்றும், தோல்வி அடைந்துள்ள விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ஆர்த்தி, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதியிருந்தார். தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்த்த அவர், கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதாவது, தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும் எடுத்ததாக வந்தது. இந்த இரண்டு பாடப்பிரிவுகளிலும் அவர் தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டது.

அடுத்த இருந்த கணிதத்தில் 56 மதிப்பெண்கள், இயற்பியலில் 75 மதிப்பெண்கள், வேதியியலில் 71 மதிப்பெண்கள், உயர் கணிதத்தில் 82 மதிப்பெண்கள் என மொத்தம் 514 மதிப்பெண்கள் பெற்றதாக முடிவுகள் வெளியானது.

ஆனால், இந்த பாடப்பிரிவுகளில் அவர் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உரிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, உயர்கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top