Connect with us

Raj News Tamil

இந்தியாவிற்கு வரும் மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியா

இந்தியாவிற்கு வரும் மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியாவிற்கும், மலேசியா நாட்டிற்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளும், சகோதரத்துவத்துடன் பல்வேறு ஒப்பந்தங்களை அவ்வப்போது கையெழுத்திட்டு வருகின்றன.

இந்த உறவை மேம்படுத்தும் வகையில், இந்தியா-மலேசியா இணை கமிஷன் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 6-வது இணை கமிஷன் கூட்டம், வரும் நவம்பர் 7-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாம்ரி அப்துல் காதிர், வரும் 6-ஆம் தேதி அன்று, இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

இந்த கூட்டத்தில், அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், வனிகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சாரம், சுற்றுலா ஆகிய அம்சங்களில், மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்ல உறவு நிலைக்கவும், முன்னேற்றம் ஏற்படுத்தவும், எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில், இந்தியாவின் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தங்கர் கலந்துக் கொள்ளவும் உள்ளார்.

More in இந்தியா

To Top