Connect with us

ரஜினிக்கு வில்லனாகும் ‘மாமன்னன்’ பட நடிகர்..! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சினிமா

ரஜினிக்கு வில்லனாகும் ‘மாமன்னன்’ பட நடிகர்..! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெற்றி பெற்றதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் த.செ. ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இவருடைய இயக்கத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெற்றியை பெற்றதால் இவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பகத் பாசில் ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலுவாக மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பகத் பாசில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

More in சினிமா

To Top