Connect with us

Raj News Tamil

பாஜகவுக்கு வாக்களித்த பெண்ணை சரமாரியாக தாக்கிய உறவினர்கள்..!!

இந்தியா

பாஜகவுக்கு வாக்களித்த பெண்ணை சரமாரியாக தாக்கிய உறவினர்கள்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அம்மாநிலத்தின் சிஹொரி மாவட்டம் அகமத்பூர் பகுதியை சேர்ந்தவர் சமினா (30) என்ற இஸ்லாமிய பெண் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். மேலும், தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து அந்த வெற்றியை சமினா கொண்டாடியுள்ளார்.

சமினா பாஜகவுக்கு வாக்களித்ததையும், அக்கட்சி வெற்றிபெற்றதை அவர் கொண்டாடியதையும் சமினாவின் மைத்துனன் ஜாவித் கான் விரும்பவில்லை. இதனால் சமினாவை ஜாவித் கான் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னை சரமாரியாக தாக்கிய மைத்துனன் ஜாவித் கான் மீது சமினா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in இந்தியா

To Top