Connect with us

Raj News Tamil

லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து விலகிய நயன்!

சினிமா

லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து விலகிய நயன்!

மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய திரைப்படங்களை எடுத்தவர் ரத்னகுமார். இவர் அடுத்ததாக, ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் கதையை எழுதியுள்ள லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகை நயன்தாராவும், ராகவா லாரன்ஸ்-ம் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இப்படத்தில் இருந்து, நடிகை நயன்தாரா விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று, தற்போது வரை தெரியவில்லை.

More in சினிமா

To Top