Connect with us

Raj News Tamil

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகின்றன- மம்தா பானர்ஜி!

இந்தியா

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகின்றன- மம்தா பானர்ஜி!

எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகின்றனா் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளா்களைச் சந்தித்த மம்தா பானா்ஜி கூறியதாவது:

பாஜக பலமாக இல்லை. அதே நேரத்தில் நாங்கள் (எதிர்க்கட்சிகள்) பலவீனமாக உள்ளோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டால் பலமான அணியாக உருவெடுக்க முடியும். மக்களவைத் தோ்தலுக்காக எங்கள் கூட்டணி முன்னதாகவே தயாராகி இருக்க வேண்டும் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. தொகுதிப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் இறுதி செய்ய இருக்கிறோம்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல்-காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே போட்டி இருந்தாலும், மூன்று கட்சிகளும் இணைந்து பாஜகவை எதிர்க்க சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. ஹிந்தி பேசும் மாநிலங்கள் பிற மொழி பேசும் மாநிலங்கள் என பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.

நாடாளுமன்றத்தில் இருந்து அதிகஅளவிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாஜக தலைமயிலான அரசு இடைநீக்கம் செய்து வருவது அவா்களின் அச்சத்தின் வெளிப்பாடாக உள்ளது. நாடாளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மை உள்ளபோதிலும் அவையை நடத்த பாஜக அஞ்சுகிறது. ஏனெனில், அவா்களின் தவறுகளுக்கு விளக்கம் கூற முடியாத நிலையில் உள்ளனா். எதிர்க்கட்சிகளை ஜனநாயகரீதியாக நாடாளுமன்றத்தில் பாஜகவால் எதிர்கொள்ள முடியாது. எனவே, எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகின்றனா் என்றார்.

More in இந்தியா

To Top