Connect with us

Raj News Tamil

இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக புஷ்பா 2 செய்த சாதனை!

சினிமா

இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக புஷ்பா 2 செய்த சாதனை!

ஆர்யா, 100% லவ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுகுமார். இவரது இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா.

தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதற்கிடையே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டர் வெளியான பிறகு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு, இரண்டு மடங்கு அதிகரித்தது.

இந்நிலையில், இந்த போஸ்டர் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதாம். அதாவது, இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் இந்திய திரைப்பட போஸ்டர் என்ற சாதனையை, இந்த போஸ்டர் பெற்றுள்ளது. இதனை தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More in சினிமா

To Top